சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

sivaraj1

ம.இ.காவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞர் பிரிவைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும்,ம.இ.கா புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் k.லோகநாதனையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ கோ.பழனிவேலின் முடிவுக்கு ம.இ.கா இளைஞர் அணி நன்றி தெரிவித்துக் கொள்வதாக அணியின் தலைவர் ச.சிவராஜ் தெரிவித்தார்.

கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிகரிக்கும் வாய்ப்பும் இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுருப்பது வரவெற்கதக்கது என சிவராஜ் கூறினார். குறிப்பாக தேசிய நிலையில் இளைஞர் மகளிர்,புத்ரா,புத்ரி பிரிவுகளுக்கு புதிய உறுப்பினர்களின் சேர்ப்புக்கு வழிவகுக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடிய ஒன்றாக அமைப்படுத்தப்படும் போது,ம.இ.கா வலிமை மிகுந்த கட்சியாக மாறும் என்றார் அவர்.

அடுத்த 14ஆவது பொது தேர்தலின் போது,சுமார் 65லட்சம் இளைஞர்கள் வாக்காளர்களாக இருப்பார்கள் என புள்ளி விபரம் காட்டுகிறது.இந்த எண்ணிக்கை,ஒரு சமூகத்தின் வாக்காள்ர் எண்ணிக்கைக்கு ஈடானதாகும் எனவே,இளைஞர்களின் ஆதரவை கட்சிக்கு மீண்டும் கொண்டு வர இளைஞர் அணி தயாராக உள்ளது எனவும் இந்த முயற்சிக்கு ம.இ.கா தலைமைத்துவத்தின் ஆதரவு தேவை என்றும் சிசராஜ் வலியுறுத்தினார்.

இதனிடையே,இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘நாம்’ திட்டத்தை ம.இ.கா அங்கீகரிக்க வேண்டும்.நாடு தழுவிய நிலையில் இளைஞர்களை கவர்ந்து வரும் இந்த திட்டத்தின் வழி,ம.இ.கா மீதும் அந்த தலைமைத்துவத்தின் மீதும் நம்பிக்கை பிறப்பத்ற்கு ஏதவாது ‘நாம்’ திட்டத்தை ம.இ.காவின் அதிகாரப்பூர்வ செயல் திட்டங்களில் ஒன்றாக கட்சி அறிவிக்க வேண்டும் என ச.சிவராஜ் கேட்டு கொண்டார்.

ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களின் வழி,கட்சியை வலுப்படுத்துவதன் வழி அடுத்த பொது தேர்தலின் போது தேசிய முன்னணியின் வெற்றியை இது உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்றும் சிவராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.