விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் கத்தி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 18ஆம் தேதி கத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தில் உள்ளது. விஜய் பாடிய செல்ஃபி புள்ள பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட உள்ளது. முதலில் இந்தப் பாடலை லண்டனுக்குச் சென்று படம்பிடிக்கப் போவதாக தான் தகவல் வெளியானது. ஆனால் அதுதான் இல்லை. படத்தின் பாடலை மும்பையிலேயே படமாக்கப் போகிறார்களாம். இதற்காக மும்பையில் 2.5 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து படமாக்கவிருக்கிறார்களாம்.