இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீக்கிக்கொண்டுள்ளது. வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தனி நீதிபதி நியமனத்திற்கு தடை விதித்திருந்தார்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர் பணி நியமனத்திற்குவிதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்து. இதன் அடிப்படையில் பணி நியமனத்திற்கான தடையைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.