கோலாலம்பூர், 07 நவம்பர் 2026 : தீபாவளித் திருநாளை முன்னிட்டு, மலேசிய மக்கள் முற்போக்குக் கட்சியின் (PPP) தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன், நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இனிய இந்நாளில் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், மக்களின் உள்ளங்களில் அன்பு பெருகவும், அனைவரது வாழ்விலும் அமைதியும் வளமும் நிலைத்திருக்கவும் வேண்டும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தீப ஒளித் திருநாள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதுடன், குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திருநாள் மலேசிய மக்களிடையே சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நன்னாளாக அமைய வேண்டும் என்றும் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் வாழ்த்தியுள்ளார்.







