பெட்டாலிங் ஜெயா, 07 நவம்பர் 2026 : மலேசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான மெனாரா மெர்டேக்கா மேபேங்கில் அமைந்துள்ள 118 மாலில், செல்காம் டிஜி பெர்ஹாட் நிறுவனம் தனது மூன்றாவது ‘CelcomDigi Store Life’ விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது.
இதற்கு முன்னதாக கார்டன்ஸ் மால், சன்வே பிரமிடு ஆகிய இடங்களில் இந்நிறுவனத்தின் ‘Life’ விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. புதிய நிலையத்தில் கைப்பேசிகள், மின்னணுச் சாதனங்கள், பொழுதுபோக்கு மற்றும் நவீன டிஜிட்டல் சேவைகள் என 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. சாம்சங், டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்வையிட்டு அனுபவிக்கலாம்.
செல்காம் டிஜியின் விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகப் பிரிவு தலைமை அதிகாரி செங் வெங் ஹோங் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதில் நேரடி விற்பனை நிலையங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது மலேசியா முழுவதும் 63க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை நிலையங்கள், 300க்கும் மேற்பட்ட செல்காம் டிஜி எக்ஸ்பிரஸ் நிலையங்கள் உள்ளிட்ட 10,000க்கும் அதிகமான விற்பனை மற்றும் சேவை மையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
ஆண்டு இறுதி சிறப்புச் சலுகைகள்
புதிய விற்பனை நிலையத் திறப்பை முன்னிட்டு, ‘Play Deals’ என்ற ஆண்டு இறுதிச் சலுகைத் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டம் 2026 நவம்பர் 11 முதல் 2027 பிப்ரவரி 15 வரை நடைமுறையில் இருக்கும்.
முக்கியச் சலுகைகள்:
- Easy360 தவணைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங், HONOR, கூகுள் சாதனங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவோருக்கு மூன்று மாதங்கள் வரை இலவச போஸ்ட்பெய்ட் கட்டணம்.
- பழைய கைப்பேசியை மாற்றிக் கொடுப்போருக்கு கூடுதலாக RM300 வரை சலுகை.
- PhoneCARE Swap & Replace சேவைக்கு மூன்று மாதங்களுக்கு 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி.
- PayFlex மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கு மூன்று மாதங்கள் 0 விழுக்காடு லாப விகிதத்தில் கட்டணம் செலுத்தும் வசதி.
- ஒப்பந்தமின்றி வாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங், HONOR, கூகுள் கைப்பேசிகளுக்கு RM200 வரை தள்ளுபடி; 12 மாத இலவச PhoneCARE Swap சேவை.
GTA VI மற்றும் இதர சலுகைகள்
நவம்பர் 19 முதல் PlayStation 5 Disc Console (Slim) மற்றும் CelcomDigi One திட்டத்தை வாங்குவோருக்கு GTA VI Standard Edition இலவசமாக வழங்கப்படும். GTA VI முன்பதிவு விலை RM299 ஆகவும், PS5 மற்றும் GTA VI இணைப்புத் தொகுப்பின் விலை RM2,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், StreamMORE ஆசிய மற்றும் விளையாட்டுத் தொகுப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட ரோமிங் சேவைகள், PhoneFIX பழுதுபார்ப்புச் சேவை ஆகியவற்றுக்கு மூன்று மாதங்களுக்கு 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்களை நவம்பர் 11 முதல் இந்த இணைப்பு மூலம் அறிந்துகொள்ளலாம் : https://cdlink.net/playdeals







