என் தமிழ்

மலேசியாவின் மிகப்பெரிய சுழலும் கோலத்தைப் படைத்து சாதனை படைத்த மைடின் நிறுவனம் – மலேசியா சாதனைப் புத்தகத்தில் அங்கீகாரம்

கோலாலம்பூர், 07 நவம்பர் 2026 : தீபாவளியை முன்னிட்டு, மலேசியாவின் மிகப்பெரிய சுழலும் கோலத்தை அமைத்து மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. 20 அடி அகலமும் 20 அடி உயரமும் கொண்ட இந்த பிரம்மாண்ட கோலம், சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் சாதனைகளைப் பதிவு செய்யும் மலேசிய சாதனைப் புத்தகம் (Malaysia Book of Records) இச்சாதனையை அங்கீகரித்துள்ளது.

தீபாவளியின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான கோலக் கலையை நவீன வடிவில் வெளிப்படுத்தும் இந்தப் படைப்பு, பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. இதனிடையே, தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் மலேசிய சாதனைப் புத்தகம் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

Scroll to Top