கோலாலம்பூர், 07 நவம்பர் 2026 : தீபாவளித் திருநாளை முன்னிட்டு, மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) தேசிய இளைஞர் பிரிவு மற்றும் விளையாட்டுத் துறைப் பொறுப்புகளில் உள்ள அரவிந்த் தனபாலன், மலேசிய மக்களுக்கு தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தீப ஒளித் திருநாளில் மகிழ்ச்சி, நம்பிக்கை, வளம் மற்றும் செழிப்பு ஆகியவை அனைவரது வாழ்விலும் நிறைய வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
மயில் தனது வண்ணமயமான தோகையை விரித்தாடுவது போல, இத்தீபாவளித் திருநாள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் புதிய நம்பிக்கையும் வளமான எதிர்காலமும் மலரச் செய்யட்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த் தனபாலன், MIC தேசிய பிரிகேட் மிலே செயலாளர், தேசிய ம.இ.கா விளையாட்டுப் பணியகச் செயலாளர், தேசிய ம.இ.கா பாக்காப் செயலாளர், தேசிய MIC இளைஞர் உதவிச் செயலாளர் மற்றும் ம.இ.கா பண்டார் துன் ரசாக் இளைஞர் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார்.







