என் தமிழ்

தீபாவளி வாழ்த்து தெரிவித்த யுனேஸ்வரன் ராமராஜ் – அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக அமைய வாழ்த்து

கோலாலம்பூர், 07 நவம்பர் 2026 : தீபாவளித் திருநாளை முன்னிட்டு, மலேசிய துணை மனிதவள அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், நாட்டு மக்களுக்கு தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தீபத்தின் ஒளி இல்லங்களை மட்டுமல்லாமல், ஒவ்வொருவரின் இதயத்திலும் அன்பு, நம்பிக்கை மற்றும் நல்வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

இத்திருநாளில் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகவும், மக்களிடையே அன்பும் கருணையும் வளரவும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேற்றுமைகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையின் வலிமையால் வெற்றிகளைப் படைக்க வேண்டும் என்றும் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top