என் தமிழ்

காஜாங் இந்தியர் அரசு சாரா அமைப்புகளின் தலைவர் குமாரவேலு தீபாவளி வாழ்த்து – ஒற்றுமையும் செழிப்பும் பெருக வாழ்த்து

சிலாங்கூர், 07 நவம்பர் 2026 : தீபாவளித் திருநாளை முன்னிட்டு, காஜாங் இந்தியர் அரசு சாரா அமைப்புகளின் (NGO) தலைவர் திரு. குமாரவேலு, மலேசிய வாழ் இந்தியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி என்பது ஒளியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் சிறப்புமிக்க திருநாள் என்று குறிப்பிட்ட அவர், இப்பண்டிகையின் ஒளி அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கை, வெற்றி, ஒற்றுமை மற்றும் செழிப்பைக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்தினார்.

மேலும், குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடும் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் வாழ்விலும் அமைதி, நல்ல ஆரோக்கியம், அன்பு மற்றும் வளம் பெருக வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்திருநாள் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதோடு, சமூகத்தில் அன்பு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் நன்னாளாக அமைய வேண்டும் என்றும் குமாரவேலு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Scroll to Top