என் தமிழ்

காடெக் மக்களுடன் கலந்துரையாட கே.ஜே. வருகை – 22 வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்த நதராஜா செல்லப்பா

மலாக்கா, 07 நவம்பர் 2026 : மலாக்கா மாநிலத்தின் காடெக் சட்டமன்றத் தொகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் (KJ) பங்கேற்கவுள்ளதாக, தேசிய முன்னணி வேட்பாளர் நதராஜா செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை, கோலா ஈனாவில் உள்ள அல்-அலேயா பள்ளிவாசலுக்கு எதிரே நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும் தேவைகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், காடெக் தொகுதியின் வளர்ச்சிக்காக 22 திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.

மக்களுக்கான 22 திட்டங்கள்:

  1. மாதம் 20 கன மீட்டர் வரை வீட்டு உபயோகத்திற்கான இலவச குடிநீர்.
  2. ஐந்து ஆண்டுகளில் 25,000 வீடுகள் சொந்தமாக்கும் திட்டம்.
  3. ஐந்து ஆண்டுகளுக்கு நில வரி உயர்வு இல்லை.
  4. புதிய தொழிற்பேட்டைகள் மூலம் 25,000 வேலைவாய்ப்புகள்.
  5. முதியோருக்கான வயது வந்தோர் டயப்பர், ஆதரவற்ற நோயாளிகளுக்கான பால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்.
  6. ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை.
  7. மலாக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒருமுறை RM100 SSPN சேமிப்பு உதவி.
  8. ‘மெலாக்கா எனது வீடு’ திட்டத்தின் மூலம் பழைய வீடுகளைப் புதுப்பித்தல் மற்றும் புதிய வீடுகள் கட்டுதல்.
  9. சிறு வணிகர்களுக்கு நிதியுதவி.
  10. SPM மற்றும் STPM மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்.
  11. MeSRA திட்டத்தின் மூலம் கோழி மற்றும் இறைச்சி விலையில் 30 விழுக்காடு தள்ளுபடி.
  12. KAFA மாணவர்களுக்கு போக்குவரத்து உதவி.
  13. இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான தொழில் முனைவோர் மானியம்.
  14. சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு RM80,000 வரை கடனுதவி.
  15. இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு நிதியுதவி.
  16. மலாக்கா மாநிலப் பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கு (PIBG) ஒருமுறை மானியம்.
  17. ஹஜ் பயணிகளுக்கு ஒருமுறை ‘சகுஹாத்தி’ உதவி.
  18. பி-ஹெய்லிங் (P-Hailing) சேவைத் தொழிலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் பராமரிப்பு உதவி.
  19. புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு ஒருமுறை ‘சகுஹாத்தி’ உதவி.
  20. கிராமப்புறங்கள் மற்றும் முக்கியச் சாலைகளில் சூரிய மின்விளக்குகள் அதிகரிப்பு.
  21. மலாக்காவை தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சிக்கான (TVET) மையமாக உருவாக்குதல்.
  22. ‘மக்களுக்கான மக்கள் பிரதிநிதி’ (WRUR) திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துதல்.

இத்திட்டங்கள் அனைத்தும் மலாக்கா மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, வீட்டு வசதி மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top