என் தமிழ்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி : ரஷியா ஆதரவு

நியூயார்க், 28 செப்டம்பர் 2026 : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்ற 81-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரமும் உள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை ஐ.நா.வில் விரிவுபடுத்த வேண்டும் என்றும், நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியா மற்றும் பிரேசிலின் கோரிக்கைகளை ரஷியா ஆதரிப்பதாகவும் லாவ்ரோவ் கூறினார்.

இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ரஷியாவின் ஆதரவு வெளியாகியுள்ளது.

Scroll to Top