என் தமிழ்

தகைமை தமிழ்க்கல்வி விருது 2026 : தேசிய அளவில் சிறந்த தமிழாசிரியர் விருது பெற்ற செல்வா இலெட்சுமணன்

கோலாலம்பூர், 25 செப்டம்பர் 2026 : தகைமை தமிழ்க்கல்வி விருது விழா 2026-ல், தேசிய அளவிலான சிறந்த தமிழ்மொழி ஆசிரியர் விருதை செல்வா இலெட்சுமணன் பெற்றுள்ளார். தமிழாசிரியராக தனது பயணத்தில் இந்த விருது கிடைத்தது மறக்க முடியாத பொன்னான தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது வளர்ச்சிக்கும் இந்த அங்கீகாரத்திற்கும் உறுதுணையாக இருந்த மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளித் தலைவர்கள், சக ஆசிரியர்கள், ஆசான்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் தனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல என்றும், தமிழ்மொழி மற்றும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காக இணைந்து பயணிக்கும் அனைவருக்குமான அங்கீகாரம் என்றும் செல்வா இலெட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் வளர்ப்போம்… தலைமுறைகளை வளர்ப்போம்!” என்ற நோக்கத்துடன் தொடர்ந்து தமிழைக் கற்பித்து, அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top