கோலாலம்பூர், 25 செப்டம்பர் 2026 : மலேசியாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தும் வகையில், வேஹாரா ஆர்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாஸ்டர் குணரத்தினம் வேலாயுதம் மற்றும் செல்வி லவானியா விசித்குமரன் ஆகியோர் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
சுற்றுலா மலேசியா – கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இப்பயணத்தில், அவர்கள் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்த்துகைகளில் பங்கேற்க உள்ளனர்.
மலேசியாவின் பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் கலைச் செழுமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவதுடன், பல்வேறு நாடுகளுக்கு இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தையும் நட்புறவையும் மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலாசாரப் பயணம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2, 2026 வரை மாஸ்கோ, ரஷ்யாவில் நடைபெறுகிறது.








