கோலாலம்பூர், 25 செப்டம்பர் 2026 : மத்திய இலையுதிர் விழாவையொட்டி, பசார் பெசார் செம்பாக்காவில் உள்ளூர் மக்களுடன் இணைந்து மூன்கேக் வழங்கி விழாவைக் கொண்டாடினார் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. இந்த நிகழ்வு வெறும் விழாக்கால உணவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான நிகழ்வாக மட்டுமின்றி, உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடி, புன்னகையையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளும் அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
சமூகத்தில் நிலவும் நட்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இதுபோன்ற விழாக்கள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
விழாக்காலங்கள் மக்களை ஒன்றிணைத்து, ஒருவருக்கொருவர் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும், ஒற்றுமையின் இந்த உணர்வு வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர வேண்டும் என்றும் கோபிந்த் சிங் டியோ வாழ்த்து தெரிவித்தார்.







