என் தமிழ்

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

சென்னை, 09 நவம்பர் 2026 : இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

வெளியிடப்பட்டுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில் ‘ஃபயர்’ என்ற கானா பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் சிம்பு ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் ‘தாஸ்’ என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘அரசன்’ படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் மற்றொரு கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to Top