என் தமிழ்

சன் மூன் இந்தியன் பஜார் புதிய தேதி அறிவிப்பு : நவம்பர் 3 முதல் 7 வரை நடைபெறும்

சிலாங்கூர், 23 செப்டம்பர் 2026 : வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களது நிறுவனங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையவுள்ள சன் மூன் இந்தியன் பஜார், புதிய தேதியில் நடைபெறவுள்ளது.

முதலில் அக்டோபர் 14 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஐந்து நாள் நிகழ்வு, தற்போது நவம்பர் 3 முதல் 7, 2026 வரை நடைபெறுகிறது. சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள KIP Mall Desa Coalfields வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் வணிகக் கண்காட்சிகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் குறுகியகால பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் உறுமி இசை, ஓவியம், நடனம் மற்றும் பாடல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், சேலை கட்டுதல், நக அலங்காரம் மற்றும் பாத நக அலங்காரம் உள்ளிட்ட குறுகியகால பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளின் ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்கும் வகையில் குழந்தைகளுக்கான DJ பயிற்சியும் இடம்பெறவுள்ளது. வணிக நிறுவனங்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் தொழில்முனைவோர் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை சந்திக்கவும் இந்த பஜார் வாய்ப்பாக அமையவுள்ளது.

காட்சிக்கூட இடங்கள் வேகமாக நிரம்பி வருவதால், ஆர்வமுள்ள விற்பனையாளர்கள் தங்களது இடங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சன் மூன் இந்தியன் பஜார் நவம்பர் 3 முதல் 7ஆம் தேதி வரை KIP Mall Desa Coalfields, சுங்கை பூலோவில் நடைபெறவுள்ளது.

Scroll to Top