சரவாக், 08 செப்டம்பர் 2026 : மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த புதிய தலைமுறை பாடகர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை வளர்த்து தேசிய அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘Borneo Rising’ என்ற புதிய இசைத் திறன் போட்டியை CelcomDigi மற்றும் Astro இணைந்து தொடங்கியுள்ளன.
மலேசியாவில் கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த இசைத் திறமையாளர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் முதல் ரியாலிட்டி தொலைக்காட்சி பாடல் போட்டியாக ‘Borneo Rising’ அமையவுள்ளது. 8 வாரங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி முழுமையாக கிழக்கு மலேசியாவில் நடத்தப்பட உள்ளது.
சபா மற்றும் சரவாக் முழுவதும் ஒரு மாத காலமாக நடைபெற்ற தேர்வுச் சுற்றுகளைத் தொடர்ந்து, போட்டியின் அடுத்த கட்டம் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்து வரும் பாடகர்கள் தங்களது திறமையை சொந்த மாநிலத்திலேயே வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
சபா மற்றும் சரவாக்கின் வளமான இசை பாரம்பரியம், கலாசாரப் பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதுடன், உள்ளூர் மக்களின் கதைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இசை மூலம் வெளிப்படுத்தும் தளமாகவும் ‘Borneo Rising’ அமையவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள CelcomDigi prepaid வாடிக்கையாளர்கள், தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதற்கான கூடுதல் வாக்குகளை ஒவ்வொரு reload மூலமும் பெற முடியும். மேலும், நேரடி நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் மற்றும் போட்டியாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகளையும் CelcomDigi சமூக ஊடகப் போட்டிகள் மற்றும் பரிசுத் திட்டங்கள் மூலம் பெறலாம்.
இதுகுறித்து CelcomDigi நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சான் மே லிங்க் கூறுகையில், சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த பாடகர்களுக்கு தேசிய அளவில் அறிமுகமாகும் வாய்ப்பை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ‘Borneo Rising’ போட்டியை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ரோடிஷோ நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகள், CelcomDigi தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சிறப்பு சலுகைகள், சாதனங்களுக்கான கவர்ச்சிகரமான offers உள்ளிட்டவை இடம்பெறும். வாக்களிப்பு முறை மற்றும் பிற நிகழ்ச்சி தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு : +6016 336 3327 | nurabdur@celcomdigi.com







