என் தமிழ்

B40, M40 இந்திய தொழில்முனைவோருக்கு மதானி மானியத் திட்டம் : விண்ணப்பங்கள் தொடக்கம்

29 ஜூன் 2026 : இந்திய சமூகத்தைச் சேர்ந்த B40 மற்றும் M40 பிரிவைச் சேர்ந்த புதிய (ஸ்டார்ட்அப்) தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், ‘உயர்வு மதானி’ (Uyarvu MADANI) மானியத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 29) முதல் திறக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், தொழில்முனைவோருக்கு நிதி உதவியுடன் வணிக மேம்பாட்டு ஆதரவும் வழங்கப்படுகிறது. மைக்ரோ பிரிவில் RM20,000 வரை, வளர்ச்சி (Growth) பிரிவில் RM35,000 வரை மற்றும் உயர்நிலை (High) பிரிவில் RM50,000 வரை மானியம் வழங்கப்படும். மொத்தம் 700 இந்திய தொழில்முனைவோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூன் 29 காலை 11.00 மணி முதல் ஜூலை 13 மாலை 5.00 மணி வரை ஏற்கப்படும்.

எனினும், 1,500 விண்ணப்பங்கள் கிடைத்தவுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்கு முன்பே விண்ணப்பப் பதிவு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைய தொழில்முனைவோர் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்ப வழிகாட்டுதல் : https://l1nk.dev/z3ymue2

விண்ணப்பப் படிவ இணைப்பு : https://forms.gle/x2t6xz6YAbrE4dLe8

மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள : 03-8892 3438 / 03-8886 6197 / 03-8886 6013 / 03-8871 1127 / 03-8886 6221

Scroll to Top