என் தமிழ்

‘பகாட் மதானி’ திட்டம் தொடக்கம் : 25,000 இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு

நெகிரி செம்பிலான், 30 ஜூன் 2026 : மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், நெகிரி செம்பிலானின் செண்டாயனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகாட் மதானி’ என்ற தேசிய திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

2026 முதல் 2027 வரை 25,000 இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெறும் வகையில், அரசுடன் இணைந்து GLIC, GLC மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ‘பகாட் மதானி’ என்பது வெறும் பயிற்சி அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மட்டுமல்ல என்றும், சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மலேசிய இளைஞருக்கும் தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டு கண்ணியமான எதிர்காலத்தை உருவாக்க சமமான வாய்ப்பை வழங்கும் முயற்சி என்றும் தெரிவித்தார்.

மேலும், அனைவரும் ஒரே நிலையில் இருந்து வாழ்க்கையைத் தொடங்குவதில்லை என்பதால், திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்புகளை உருவாக்குவது மதானி அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டம் நாட்டின் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, அறிவு, திறன், நன்னடத்தை மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய புதிய தலைமுறையை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைத்த அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் பங்காளிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Scroll to Top