என் தமிழ்

2027 பட்ஜெட் : செலவின சவால்களை எதிர்கொள்ள மடானி அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

கோலாலம்பூர், 13 ஆகஸ்ட் 2026 : 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) உடன் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மடானி அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டு பட்ஜெட் மூலம் வாழ்க்கைச் செலவு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேவேளை, பொதுமக்களின் நலன் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அரசாங்க மானியங்களில் ஏற்படும் கசிவுகளைத் தடுப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் மானியங்கள் உண்மையில் அவை தேவைப்படும் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

முதன்மை நிதிச் செயலாளர் டான் ஸ்ரீ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான், KPDN தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் சாயுத்தி பக்கார், நிதி அமைச்சகம் மற்றும் KPDN-ன் மூத்த அதிகாரிகள், அத்துடன் 2027ஆம் ஆண்டு பட்ஜெட் குழுவினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Scroll to Top