புத்ராஜயா, 22 மே 2026 : மாண்புமிகு மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழக மக்கள் தற்போது முதலமைச்சர் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
மேலும், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திப்பதற்கும் இந்தியா செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த பயணத்தின் போது வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திற்கும் ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள விருப்பம் இருப்பதாகவும் முதலமைச்சர் விஜயிடம் அவர் குறிப்பிட்டார்.
தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் முதலமைச்சர் விஜய் சிறப்பாக வழிநடத்தி ஆட்சி செய்ய தேவையான வலிமையும் ஞானமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.





