கோலாலம்பூர், 14 மே 2026 : மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்களுடன், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முக்கியப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமான சந்திப்பு இனிதே நடைபெற்றது. இச்சந்திப்பில் டான்ஶ்ரீ அவர்கள் மணிமன்றப் பேரவையின் பொறுப்பாளர்களை இன்முகத்துடன் வரவேற்றார்.
மேலும், இந்தச் சந்திப்பில் இளைஞர் மேம்பாடு மற்றும் மணிமன்றப் பேரவையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த பல்வேறு கருத்துகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த 70 ஆண்டுகளாக சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் இம்மன்றத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் அமைந்தது.
கடந்த 70 ஆண்டுகளாக மலேசிய சமூகத்திற்குத் தொண்டாற்றி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் அமைப்பிற்கு, டான் ஸ்ரீ அவர்களின் சந்திப்பு மிகப்பெரிய கௌரவமாகும்.





