26 ஏப்ரல் 2026 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா உள்ளிட்டோரின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்தது.
பின்னர் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியின் நாயகியாக திகழ்ந்தார்.
முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்திருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷ் அவமானத்திலிருந்து தப்பியதுடன், இறுதி போட்டிக்கு முன் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.





