என் தமிழ்

RKAT குடியிருப்புகள் : சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் அன்வார்

கெமாஸ், 27 ஜூலை 2026 : நெகிரி செம்பிலானின் கெமாஸில் அமைந்துள்ள சையத் சிராஜுத்தீன் முகாம் (Kem Syed Sirajuddin), கேரிசன் தலைமையகத்தில் உள்ள மலேசிய ஆயுதப்படை (MAF) குடும்பக் குடியிருப்புகளின் (RKAT) சீரமைப்புப் பணிகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட அவர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பான, வசதியான மற்றும் சிறந்த சூழலில் வாழ்வதை உறுதி செய்வதே இந்த சீரமைப்புப் பணிகளின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

மலேசிய ஆயுதப்படை வீரர்கள் நாட்டிற்காக ஆற்றும் சேவைக்கு உரிய அங்கீகாரமாக, அவர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனும் வாழ்க்கைத் தரமும், மடானி (MADANI) அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக தொடர்ந்து இருக்கும் என்றும் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

Scroll to Top