13 ஏப்ரல் 2026 : சமீபத்தில், மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு டீசல் வழங்கப்பட்டதாக சில பொறுப்பற்ற தரப்புகள் பரப்பிய தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், அந்த டீசல் மலேசியாவுக்குச் சொந்தமானதல்ல என்றும், அதில் Petronas எந்த விதத்திலும் தொடர்பில்லையெனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது அரசாங்கத்தின் தீர்மானமும் அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வெளிநாட்டு நிறுவனமான Vitol மேற்கொண்ட தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்தி, தற்போதைய சவாலான பொருளாதார சூழலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






