நெகிரி செம்பிலான், 22 ஜூலை 2026 : நெகிரி செம்பிலானின் பாலோங் 4, 5 மற்றும் 6 பகுதிகளைச் சேர்ந்த இந்திய சமூகத்தினரை, அங்குள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சந்தித்து கலந்துரையாடினார்.
நட்பும் குடும்ப பாசமும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அப்பகுதி மக்களுடன் நேரடியாக உரையாடிய அவர், அவர்களின் கருத்துகள், அன்றாட வாழ்க்கை மற்றும் சமூகத்தின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமைந்ததாகவும், சமூகத்தின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் உபசரிப்பிற்கும் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்று, சமூக ஒற்றுமையும் நலனும் தொடர்ந்து மேம்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.








