22 ஜூலை 2026 : சரவாக் தினத்தை முன்னிட்டு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கவிதை வரிகள் மூலம் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.
“பாதைகள் வேறுபட்டாலும் நட்பை இழக்கக் கூடாது; பரஸ்பர புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கும் வரை நாம் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்போம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் தனது வாழ்த்தை பதிவு செய்தார்.
மலேசியாவின் பல்வேறு இன, மொழி மற்றும் கலாசார மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்துவது நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்றும், அந்த ஒற்றுமை தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்ற செய்தியையும் பிரதமர் தனது வாழ்த்தின் மூலம் எடுத்துரைத்தார்.
சரவாக் மாநில மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், நல்லிணக்கமும் பரஸ்பர மரியாதையும் மலேசியாவின் மிகப்பெரிய பலமாக தொடர்ந்து திகழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்.






