என் தமிழ்

MyGENTERA: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் இளைஞர்களை வலுப்படுத்தும் முயற்சி

கோலாலம்பூர், 13 ஏப்ரல் 2026 : சமூக மட்டத்தில் சாலைப் பாதுகாப்புக் கலாச்சாரத்தின் முக்கிய இயக்குநர்களாக இளைஞர்களை உருவாக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சு (MOT), மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் (MIROS) இணைந்து மலேசிய வளமான தலைமுறைத் திட்டத்தை (MyGENTERA) வலுப்படுத்தி வருகிறது.

அதன் அமைச்சர் அந்தோனி லோக் கூறுகையில், இந்த முன்னெடுப்பானது, சாலைப் பாதுகாப்பு அம்சங்களில் அக்கறை கொண்ட இளம் தலைமுறையினரை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தினரிடையே மனப்பான்மை மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பங்கு வகிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

கட்டமைக்கப்பட்ட பயிற்சி, சக வயதினரால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம், இளைஞர்களாலேயே இயக்கப்படும் ஒரு பாதுகாப்புக் கலாச்சாரத்தை உருவாக்குவதை மைஜென்டெரா நோக்கமாகக் கொண்டுள்ளது.

“சாலைப் பாதுகாப்பு என்பது சட்ட அமலாக்கத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. அது, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே, ஒரு பகிரப்பட்ட மதிப்பாகப் புகட்டப்பட வேண்டும்,” என்று அவர், இன்று இங்குள்ள துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (TAR UMT) நடைபெற்ற “கவனி: மறைவான பகுதிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம்” என்ற நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

அதிகரித்து வரும் கவலையளிக்கும் கனரக வாகனங்களின் பார்வைப் புலப்படாத பகுதிகளின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உட்பட, சாலைப் பாதுகாப்பு கல்வியை மேலும் விரிவாக விரிவாக்கும் முயற்சிகளுக்கு இணங்கவே மைஜென்டெரா திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அந்தோனி கூறினார். அவரது கூற்றுப்படி, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பண்பாட்டை உருவாக்குவதற்காக, ‘ஸ்பாட் இட்’ பிரச்சாரமானது ஒரு தொடர்ச்சியான தளமாக மாற்றப்பட்டு, மேலும் பல வளாகங்களுக்கும் சமூகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Scroll to Top