என் தமிழ்

தன் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ Dr. எஸ்.ஏ. விக்னேஸ்வரன் சுழற்கிண்ண சிலம்பம் போட்டிகள் 2025 – சிலம்பக் கலையின் மகத்துவத்தை போற்றும் செயல்

கோலாலம்பூர், 09 செப்டம்பர் 2025 : தேசிய அளவிலான தன் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ Dr. எஸ்.ஏ. விக்னேஸ்வரன் சுழற்கிண்ண சிலம்பம் போட்டிகள் 2025 எதிர்வருகின்ற செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கெடாவில் லூனாஸில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வளாக மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 09/09/2025 கோலாலம்பூரில் உள்ள 3 பிரவும் பாய்ஸ் ஈவண்ட் ஹவுஸில் நடைபெற்றது. மலேசிய சிலம்பம் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த தேசிய சிலம்ப போட்டியை முதல் முறையாக மலேசிய இந்திய காங்கிரஸ் மற்றும் MIED வும் இணைந்து நடத்துகின்றன. மலேசிய இந்தியர்களிடம் சிலம்பம் கலையை வளர்க்கவும் மலேசியா முழுதும் சிலம்பக் கலையை பிரபலப் படுத்தும் நோக்கில் இந்த ஒத்துழைப்பு எதிர்வரும் ஆண்டுகளில் தொடரும் என இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ம.இ.கா விளையாட்டு பிரிவு தலைவர் திரு. ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார். நாடு முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து சுமார் 300 சிலம்ப விளையாட்டு வீரர்கள் கெடாவில் லூனாஸில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வளாக மண்டபத்தில் நடைபெறும் இந்த சிலம்ப போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் Dr. சுரேஷ் அவர்கள் இத்தாலியில் நடைபெற இருக்கும் சர்வதேச சிலம்ப போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நமது விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்கிற மகிச்சியான செய்தியை தெரிவித்தார்.

சமீபத்தில் சுக்மா போட்டியில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டு பிறகு பலரது முயற்சியால் பெரும் சிரமத்திற்கு பிறகு சேர்க்கப்பட்ட சம்பவம் போல் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நமது பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை நமது இளம் சந்ததியினர் பயிலவும் மூவின மக்களிடமும் சிலம்பம் கலை பிரசித்தி பெறவும் இத்தகைய தேசிய அளவிலான போட்டிகள் மிகவும் உதவியாக இருக்கும். ஏற்பாட்டுக் குழுவிற்கு பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்.

Scroll to Top