கோலாலம்பூர், 07 செப்டம்பர் 2025 : கலை உலகின் நாடியான கலைஞர்களுக்கு அங்கீகாரம் என்பதுதான் மிகப் பெரிய சன்மானம். அந்த வகையில் கலையை போற்றி கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் விமர்சகன் ஊடகம் ஏற்பாட்டில் நடைபெறும் விமர்சகன் விருது விழா இன்று 07/09/2025 தன் ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெற்றது. 6வது விமர்சகன் விருது விழா 2025 ஞாயிறு அன்று மாலை பொழுதில் நடைபெற்றது.
கலைத்துறை, திரைத்துறை, நாடகம், குறும்படம், மியுuசிக் வீடியோ, நடனக் கலைர்கள், ஊடகம், மேடை நாடகம் என பல்வேறு பிரிவுகளில் சுமார் 40 நபர்களுக்கு விமர்சகன் விருது வழங்கு கௌரவிக்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, கலைதுறையில் 20 வருட சாதனை புரிந்தவர்களுக்கான கே.எஸ் மணியம் விருது 5 பேருக்கும். ஊடக சாதனையாளர்களுக்கான அக்னி சுகுமார் விருது இருவருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது விழாவில் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இத்தகைய விருதுகள் இளைஞர்களுக்கு கலையின் மீது ஆர்வம் ஏற்படுத்த உதவும். விமர்சகனின் இந்த முயற்சிக்காக விமர்சகனை பாராட்டும் அதே வேலையில் இந்த முயற்சி தொடர வேண்டுகிறோம்.












