MH370 விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கி கணக்கிலிருந்து 111,000 ரிங்கிட் வரை பணம் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
MH370 விமானம் காணாமல் போன பிறகு, சம்பந்தப்பட்ட அந்த 4 பேரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதை உள்ளூர் வங்கி ஒன்று புகார் காவல்த்துறையில் புகார் தெரிவித்திருப்பதாக மாநகர நிதி குற்ற புலனாய்வு இலாகா துணை இயக்குனர் துணை கமிஷனர் இசானி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.
அந்நால்வரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை வங்கி கடந்த ஜூலை 18-ஆம் தேதி கண்டுபிடித்துள்ளது. “சம்பந்தப்பட்ட வங்கியே சில ரகசிய விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஆகஸ்டு 2-ஆம் தேதி காவல்துறையில் புகார் தெரிவித்ததாக அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த நான்கு பயணிகளின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீட்டது யார் என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை கமிஷனர் இசானி தெரிவித்துள்ளார்.







