ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் கிருமி தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த இரு நாட்களில் மட்டும் 56 பேர் எபோலா வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களில் மட்டும் லைபீரியாவில் 32 பேரும், சியெரா லியோனில் 19 பேரும், கினியாவில் 4 பேரும், நைஜீரியாவில் ஒருவர் பலியாகியுள்ளனர்.
இதன் மூலம் எபோலா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1069-ஆக அதிகரித்துள்ளது.