சென்னை: திருமணம் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது பற்றி கவலைப்படாமல் நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார் மீரா ஜாஸ்மின்.மீரா ஜாஸ்மினுக்கும் ஐடியில் பணிபுரியும் அனில் ஜான் டைடசுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. பின்னர் திருமணத்தை பதிவு செய்வதற்காக இருவரும் பதிவாளர் அலுவலகம் சென்றனர். ஆனால் அனிலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாக ஒரு புகார் இருந்து வந்தது. இதுபற்றி அதிகாரிகள் அனிலிடம் கேள்வி எழுப்பியதுடன் பதில் அளிக்கும்படி கோரி உள்ளனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் மீரா ஜாஸ்மின். தற்போது தமிழில் ‘விஞ்ஞானி என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி மீரா கூறும்போது,‘நடிப்பை வெளிப்படுத்தகூடிய கதாபாத்திரமாக இருந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தை பார்ப்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ரசிகர்களும் இதில் என்னை வரவேற்பார்கள் என்றார். அனிலுடன் நடந்த திருமணம் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது பற்றி மீராவிடம் கேட்டபோது, இதையெல்லாம் கேட்காதீங்க என கூறிவிட்டு நழுவினார்.