கோலாலம்பூர், 27/04/2025 : அரச மலேசிய கடற்படையின் 91-ஆம் நிறைவாண்டை முன்னிட்டு, அதன் அனைத்து உறுப்பினர்கள், பணி ஓய்வுப் பெற்றவர்கள் உட்பட அப்படையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அனைவருக்கும் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் நிலைநாட்டுவதில் கடற்படை உறுப்பினர்கள் அனைவரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு, சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எனும் தமது அதிகாரப்பூர்வ முகநூலில் மாமன்னர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதேவேளையில், இப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் மாமன்னர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இன்று, பேராக், லூமூட் கடற்படை தளத்தில் “TLDM Perkasa, Kedaulatan Terpelihara”, என்ற கருப்பொருளில் 91-ஆவது நிறைவாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சி ஒத்திகையின் போது, தி.எல்.டி.எம்-மிற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில், அதன் 10 உறுப்பினர்கள் கொல்லப்பட்ட துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, இக்கொண்டாட்டம் மிதமான அளவில் அமைந்தது.
Source : Bernama
#91NavyDay
#Agong
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews





