Mr & Mrs திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி

Mr & Mrs திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி

Mr & Mrs மலேசிய தமிழ் திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி 10/08/2024 அன்று TGV One Utama திரையரங்கில் நடைபெற்றது. கோவிந்த் சிங் இயக்கத்தில் Que Era Entertainment தயாரிப்பில் டேவிட் க்ளிண்டன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் யுவராஜ் கிருஷ்ணசாமி, சாந்தினி கௌர், புஷ்பா நாராயணன், கோவிந்த் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ரீமியர் காட்சிக்கு ஊடகவியலாளர்கள், திரைப்பட பிரபலங்கள், திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் சில பொது மக்களும் வந்திருந்தனர். திரைப்படத்தை கண்டவர்கள் திரைப்படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். மலேசியா தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின்(FINAS) தலைவர் டத்தோ கமில் ஓத்மான் ப்ரீமியர் காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

எதிர் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி மலேசியா முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது Mr & Mrs திரைப்படம். காமெடி, காதல், குடும்பப் படமான Mr & Mrs அனைவரையும் கவரும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.