என் தமிழ்

தேசிய இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி 2026 : பிளாட்டினம் விருதை வென்று பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி சாதனை

ஜோகூர், 27 அக்டோபர் 2026 : தேசிய இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி 2026-இல், பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி பிளாட்டினம் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இக்கண்காட்சியின் 20ஆம் ஆண்டு விழாவில், முதன்முறையாகப் பங்கேற்ற இப்பள்ளி, மிக உயரிய விருதான பிளாட்டினம் விருதைத் தட்டிச் சென்றுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிச் சமூகத்தினர் பெருமையடைந்துள்ளனர்.

இந்தச் சாதனைக்காகப் பள்ளிக்கு ரி.ம.2,500 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பள்ளியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளியின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிச் சமூகத்தினருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top