டிசம்பர் 23, ஆந்திர மாநிலத்தில் புதிய தலைநகராமான அமராவதியில் 7,500 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அம்மாநில அரசு நிலமும் கையகப்படுத்த உள்ளதாக மாநில மந்திரி நாராயணா தெரிவித்துள்ளார். இது மாபெரும் சர்வதேச விமான நிலையமாக உறுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதியில் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. தற்போது இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் 10 ஆண்டுகள் தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆந்திராவில் 7,500 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் சர்வதேச விமான நிலையம்
