என் தமிழ்

ஈரானில் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை: டிரம்ப்

வாஷிங்டன், 09 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு இனி தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வம் இல்லை என்றும், நிபந்தனையற்ற சரணடைப்பு மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

இதேவேளை, ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என்றும், அது ஈரானால் நடத்தப்பட்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top