என் தமிழ்

Online Tamil News Malaysia

இந்தியா தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் நாளை தொடக்கம்

நவம்பர் 4, இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் மொகாலியில் நாளை தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்கா தற்போது 125 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திலும், இந்தியா 100 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது. பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை இந்தியா 4-0 என ஒயிட்வாஷ் செய்தால் இந்தியா 2-வது இடத் துக்கு முன்னேறும்.

இந்தியாவுக்கு 4 புள்ளிகள் குறைந்து 96 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 102 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 101 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது. நியூஸிலாந்து 6வது இடத்திலும் உள்ளன.

Scroll to Top