என் தமிழ்

செகாமாட் கம்போங் குடாங் காராம் : மக்களுடன் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்துரையாடல்

செகாமாட், 23 அக்டோபர் 2026 : மலேசியாவின் செகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கம்போங் குடாங் காராமில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்கள் நலன் மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சியில், ஒற்றைப் பெற்றோர் தாய்மார்கள், ஏழைகள் மற்றும் B40 குறைந்த வருமானக் குடும்பங்கள் என 45 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை யுனேஸ்வரன் ராமராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

டத்தாரான் காசிஹ் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிராம மக்களுடன் கலந்துரையாடிய யுனேஸ்வரன், அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக, செகாமாட் நாடாளுமன்ற அலுவலகத்தின் நடமாடும் சேவை மையமும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் கருத்துகளை அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், கம்போங் குடாங் காராம் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவுக்கு (JPKK) நிதி ஒதுக்கீட்டையும் அவர் அறிவித்தார். கிராமத் தலைவர் மற்றும் JPKK முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் இயன்றவரை தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைச் செகாமாட் நாடாளுமன்ற அலுவலகத்தில் தொடர்ந்து தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த கெமெரே மாவட்டத் தலைவர் டோக் ஷஹ்ரிசான், கிராமத் தலைவர் டோக் ஷாம், JPKK உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் னேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.

கிராம மக்களிடையே ஒற்றுமையையும் பரஸ்பர அக்கறையையும் வலுப்படுத்துவதுடன், அவர்களின் தேவைகளுக்குச் செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top