80 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு கன்னியாகுமரிக்கு வருகை

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia

டிசம்பர் 19, இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலக புகழ்பெற்ற சுற்றுலாதலம் ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும் மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் பார்த்து ரசிக்கிறார்கள். இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகிறார்கள். பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்கிறார்கள். கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். மேலும் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சிகோபுரம், மியூசியம், கலங்கரை விளக்கம், மீன்காட்சிசாலை, சுனாமி நினைவு பூங்கா, கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர் விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா, மற்றும் வட்டக்கோட்டை கடற்கரை உள்பட பல்வேறு சுற்றுலாதலங்களையும் பார்த்து செல்கிறார்கள்.