7 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் ஜோதிகா

7 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் ஜோதிகா

Jyothika (99)

அக்டோபர் 25 ஏழு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா.சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். படங்களில் மீண்டும் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் அதை ஏற்காமல் இருந்தார் ஜோதிகா. அவ்வப்போது கணவர் சூர்யாவுடன் ஒன்றிரண்டு விளம்பர படங்களில் இணைந்து நடித்து வந்தார். ‘ஜோதிகா மீண்டும் நடிக்க வருவாரா?’ என்று சூர்யாவிடம் கேட்டபோது,‘அது அவரது முடிவுதான். அவர் எடுக்கும் முடிவுக்கு தடை சொல்ல மாட்டேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வெற்றி பெற்றது. அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகாவிடம் கதை சொல்லப்பட்டது. ஸ்கிரிப்ட் பிடித்திருந்ததையடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை மலையாள பட இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூ இயக்குகிறார். நடிகர் ரகுமான் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது மலையாள பட ஷூட்டிங்கில் இயக்குனர் பிஸியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. அதில் ஜோதிகா பங்கேற்று நடிக்கிறார். சென்னை, புதுடெல்லி, ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.