38000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீரென அழுத்தக்குறைவு

38000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீரென அழுத்தக்குறைவு

am

ஏப்ரல் 24, அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள்.

75 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு(Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர். இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள். திடீரென அதில் உள்ள கதவு ஒன்று திறந்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.