30 மணிநேரம் தொடர்ந்து ஓடிய அமெரிக்க மாணவர்களின் புதிய உலக சாதனை

30 மணிநேரம் தொடர்ந்து ஓடிய அமெரிக்க மாணவர்களின் புதிய உலக சாதனை

10

 

பந்தய தூரத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வீரர் ஓடிச்சென்று தனது கையில் உள்ள பாடனை மற்றொரு வீரர் கையில் கொடுத்ததும் அவர் அடுத்தக்கட்ட இலக்கை நோக்கி ஓடுவார். இதே அடிப்படையில் அமெரிக்காவின், ஜான்ஸ்டன் நகரில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். அங்குள்ள ஒரு மைதானத்தின் சுற்றுவட்டப் பாதையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு வீரர் ஓடிச் சென்று மற்றொரு வீரரின் கையில் பாடனை கொடுக்க, அங்கிருந்து அந்த வீரர் ஓட்டத்தைத் தொடர்ந்தார். இவ்வாறாக, மொத்தம் 100 கட்டங்களை மாணவர்கள் 28 மணி நேரத்தில் ஓடி முடித்தனர். இதற்கு முன் அதே அமெரிக்காவில் 2 மணி நேரத்திற்கு மட்டுமே இந்த தொடர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த சாதனை மூலம் அது முறியடிக்கப்பட்டது.