ஹவ் ஓல்ட் ஆர் யூ படப்பிடிப்பு 46 நாட்களில் முடிவடைந்தவிட்டது

ஹவ் ஓல்ட் ஆர் யூ படப்பிடிப்பு 46 நாட்களில் முடிவடைந்தவிட்டது

Jyothika (99)

ஜனவரி 29, ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ, திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய ஜோதிகாவை பல இயக்குநர்கள் மீண்டும் சினிமாவில் இழுக்க முயற்சி செய்தனர். ஆனால் எதுக்கும் பிடி கொடுக்காத ஜோதிகா ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் சூர்யாவே தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்தான் இந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ. மஞ்சு வாரியர் நடித்த அதே வேடத்தில்தான் இப்போது ஜோதிகா நடிக்கிறார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இதனை இயக்குகிறார். இதில் ஜோதிகாவின் கணவராக ரகுமானும் தோழியாக அபிராமியும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை 46 நாட்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த சோழிங்கநல்லூர் படப்பிடிப்போடு சரி பூசணி உடைத்து விட்டனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜோதிகாவின் ஆல்டைம் பேவரைட்டான சவீதா தான் அவருக்கு டப்பிங் பேசி வருகிறார்.