விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டுள்ளது பிரான்ஸ்

விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டுள்ளது பிரான்ஸ்

black-decker

மார்ச் 25, ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 148 பேரும் பலியானார்கள். இதனை விமான போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். அந்த பகுதியை சென்றடைவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் காவல்துறையின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தை நெருங்கி விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டுள்ளது.