வடகொரியா: ஏவுகணை சோதனை

வடகொரியா: ஏவுகணை சோதனை

DA2

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணுஆயுதத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 

இந்த நிலையில் வடகொரியா நேற்று அதிரடியாக 500 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை சரியாக தாக்குகிற ஆற்றல் வாய்ந்த 2 ஏவுகணைகளை ஏவி சோதித்துப் பார்த்தது. இந்த சோதனை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.20- 1.30 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் வரும் 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை தென்கொரியாவில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல் ஜார்ஜ் வாஷிங்டன், தென் கொரிய துறைமுக நகரான புசான் போய்ச் சேர்ந்துள்ளது. 

இந்த கூட்டுப்பயிற்சி மீது தனக்கு உள்ள கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தும் வகையில்தான் கடந்த சில வாரங்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி வருவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.