லண்டன் பார்லிமெண்ட் சதுக்கத்தில் காந்தியடிகள் சிலை அமைக்க ஏற்பாடு

லண்டன் பார்லிமெண்ட் சதுக்கத்தில் காந்தியடிகள் சிலை அமைக்க ஏற்பாடு

MAHATMA GANDHI STATUE, SASKATOON

நவம்பர் 10, இங்கிலாந்தின் லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில், தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கு சிலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காந்தியடிகளுக்கு லண்டன் பார்லிமெண்ட் சதுக்கத்தில் அமைக்கப்பட உள்ள சிலையின் வடிவம், பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கையில் தடி இல்லாமல் சால்வை மற்றும் பாரம்பரிய வேஷ்டியோடு லண்டனுக்கு, 1931ல், மஹாத்மா காந்தி வந்த போது, பிரதமர் அலுவலகம் முன் எடுக்கப்பட்ட போட்டோவில் இடம்பெற்றுள்ள அவரின் முழு உருவத் தோற்றம் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.

பிளிப் ஜாக்சோ என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த‌ களிமண்ணில் காணப்படும் இந்தச் சிலை வெண்கலத்தில் உருவக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கத்தின் திட்ட குழு கடந்த வாரம் வழங்கியுள்ளது. லண்டன் வாழ் இந்திய தொழிலதிபர், மேக்நாத் தேசாய்,லேடி கிஸ்வர் தேசாய் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இத‌ற்கான‌ ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் நாடு திரும்பியதன், 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காந்தி சிலை, லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில் திறக்கப்பட உள்ளது.

இந்திய பிரதமர் மோடி அடுத்த துவக்கத்தில் லண்டன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயத்தில் அவரே இச்சிலையை திறந்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் கலாச்சாரத்துறை செயலாளரும் ,காந்தி சிலை அமைப்புக்கான சிறப்பு ஆலோசனை குழு தலைவர் ஜாவித் கூறியதாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேச தந்தையின் சிலையை லண்டன் பார்லிமெண்ட் சதுக்கத்தில் அமைய‌ இருப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும் என்றார். பொதுமக்களிடமிருந்து இச்சிலை அமைக்க தேவையான நிதி திரட்டுவதற்காக http://www.gandhistatue.org/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளாது.