ரூ.19 கோடி சத்துணவு ஊழல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

ரூ.19 கோடி சத்துணவு ஊழல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

amarrecent

உத்தரபிரதேசத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் நடந்த ரூ.19 கோடி ஊழல் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் சத்துணவு ஊழல் வழக்கு தொடர்பாக அலிகார் வளர்ச்சி மேம்பாட்டு துணை தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜே.பி.சிங்கை சி.பி.ஐ. போலீசார் நேற்று காலை அலிகாரில் கைது செய்தனர். இந்த வழக்கில் சச்சின் ஆனந்த் துபே, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷங்கர் சதுர்வேதியன் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி கே.டி.என்.ராம் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகி உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. தலைமறைவாக இருந்த துபேயை போலீசார் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளனர். மற்ற 2 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.