ரம்யா கிருஷ்ணன் அம்மா வேடத்தை மட்டும் தவிர்த்து விடுகிறார்

Tamil News Malaysia

Tamil News Malaysia

டிசம்பர் 18, ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘பாகுபலி–2’ல் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாகார்ஜூனாவுடனும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். தமிழில் சிம்ரன் நடிக்கும் பேய் படத்தில் வில்லி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கும் ரம்யாகிருஷ்ணன் வயதான ஹீரோக்களின் ‘அம்மா’வாக நடிப்பதை மட்டும் தவிர்த்து விடுகிறார்.